நான்கு திருடர்களுக்கு விளக்கமறியல்!

Saturday, November 26th, 2016

குடாநாட்டில் பகல் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 பேரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 21 பவுண் நகைகள், ஒரு மடிகணனி, டிஜிட்டல் கமரா ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

யாழ். நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகயன் தலைமையில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 9 இலட்சம் ரூபா என கூறப்படுகின்றது. இதேபோல் கைது செய்யபட்டவர்கள் மேலும் 6 திருட்டு சம்பவங்களில் தொடர்பு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களும் நேற்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடைய மேலும் மூவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

1863727261Reman

Related posts: