நான்கு இளம் குற்றவாளிகள் தப்பியோட்டம்: மூவர் மாட்டினர்

யாழ். அச்சுவேலியிலுள்ள அரச சான்று பெற்ற நன்னடத்தைப் பாடசாலையில் தங்கியிருந்த நான்கு இளம் குற்றவாளிகள் கடந்த வியாழக்கிழமை(20) அதிகாலை தப்பியோடியுள்ளனர்.தப்பியோடிய குற்றவாளிகளில் மூவர் பிடிப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்படும் சிறுவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய அச்சுவேலியிலுள்ள அரச சான்று பெற்ற பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் நால்வர் பின்பக்க முட்கம்பி வேலி வழியாக பாய்ந்து அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தப்பியோடிய குற்றவாளிகளில் மூவர்கள் புத்தூர்ப் பகுதியிலுள்ள தேவாலயமொன்றில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு குற்றவாளியைத் தேடி வருவதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
|
|