நாட்டை விட்டு வெளியேற சம்பிக்க ரணவக்கவுக்கு தடை!

Tuesday, September 29th, 2020

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உட்பட மூவருக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை விதித்துள்ளது.

2016 இல் கொழும்பு ராஜகிரியவில் இடம்பெற்ற வாகனவிபத்து குறித்த விசாரணைகள் நீதிமன்றத்தில் இடம்பெற்றவேளை நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

சம்பிக்க ரணவக்க உட்பட மூவருக்கு புதிய கடவுச்சீட்டுகளை வழங்கவேண்டாம் என குடிவரவு திணைக்கள ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

சம்பிக்க ரணவக்கவின் வாகனச்சாரதிதுசித குமாரவை கைசெய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவி;ட்டு;ள்ளது.

2016 இல் கொழும்பு இராஜகிரியவில் விபத்துஇடம்பெற்றதை தொடர்ந்து சம்பிக்க ரணவக்க அந்த பகுதியிலிருந்துதப்பிச்சென்றார் பின்னர் அவ்வேளை வாகனத்தை செலுத்திய சாரதியை பொலிஸில்; ஆஜராக்கினார் என குற்றச்சாட்டுகள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related posts: