நாட்டை பொறுப்பேற்க அஞ்சியவர்கள் இன்று சுதந்திரம் தொடர்பில் பேசுவது வேடிக்கையாக உள்ளது – காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டத்தில் வடக்கு – தெற்கு என்று வேறுபாடு கிடையாது – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Wednesday, May 29th, 2024

வடக்கு ,தெற்கு வேறுபாடின்றி அனைவருக்கும் காணி உரிமம் வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி ஊடகமையத்தில்  இடம்பெற்ற ஊடகமாநாட்டில் கருத்துரைக்கையில் அவர்  இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –  நாட்டு மக்கள் வெசாக் பண்டிகையை கொண்டாடுவதற்கு சுதந்திரம் இல்லை என சஜித் பிரேமதாசவும் அநுரகுமார திசாநாயக்கவும் தெரிவித்தனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட இருண்ட யுகத்தினை தற்போதைய ஜனாதிபதி முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.

வாழ்க்கை மற்றும் எதிர்காலம் தொடர்பாக மக்கள் மகவும் அச்சத்துடன் வாழ்ந்த காலகட்டம். தொழில்வாய்ப்பு இன்மையால் நாட்டின் இளைஞர்கள் பலர் நாட்டில் இருந்து வெளியேறினர். வெசாக் பண்டிகையின் போது நாட்டில் எரிபொருள் நுகர்வும் அதிகமாக காணப்பட்டது.

இன்று இந்த நாட்டில் ஸ்திரதன்மையை ஏற்றுக்கொள்ளமுடியாமையினாலேயே சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திசாநாயக்க போன்றவர்கள் இவ்வாறான கருத்துக்களை முன்வைத்துவருகின்றனர். நாட்டை பொறுப்பேற்குமாறு கூறிய போது பின்வாங்கியவர்கள் இன்று நாட்டின் சுதந்திரம் தொடர்பாக பேசுவது வேடிக்கையாக உள்ளது.

அஸ்வெசும உறுமய போன்ற மக்களுக்கான பல வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம் மிகமுக்கியமாக காணி உரிமையும் வேறுபாடின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 000

Related posts:

இலங்கைக்கான கனடா வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர் குருநகர் சுற்றுலாப் பயிற்சி மையத்திற்கு வி...
பெண்கள் மீதான வன்முறைகள் கட்டுக்குள் வரும் யாழ்ப்பாண மூத்த பொலிஸ் அத்தியகட்சர் ஸ்ரனிஸ்லஸ் தெரிவிப்பு...
பதவிக்காலத்தை நிறைவுசெய்து நாடு திரும்பும் இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்!

நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடுவதில் எந்த மாற்றமும் கிடையாது - திட்டமிட்டபடி கூடும் என சபாநாயகர் அ...
ஈரான் துறைமுகங்களில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு - ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவிப்பு!
நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருகின்றது - மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன...