நாட்டுக்கு கிடைத்த இயற்கையின் பரிசு டில்ஷான் -சங்கா, மஹேல புகழாரம்!

Friday, August 26th, 2016

சர்வதேச ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்சானுக்கு இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிராக தம்புள்ளையில் இடம்பெறவுள்ள 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக டில்ஷான் தெரவித்துள்ளார்.

இலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வீரர் ஒருவரே டில்சான். களத்தில் போட்டியின் தன்மையை மாற்றக்கூடிய திறமையுடைய நல்ல ஒரு வீரரை இலங்கை கிரிக்கெட் அணி இழந்துள்ளது. என சங்கக்கார புகழ்ந்து பேசியுள்ளார்.

இதுமட்டுமல்லாமல் இலங்கை கிரிக்கெட்டின் அற்புதமான சேவகனே டில்சான் என மஹேல ஜயவர்தனவும் கூட தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த இயற்கையின் பரிசே டில்சான். டில்சானுடன் விளையாடியமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருடைய எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் என இவர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts: