நாட்டில் மேலும் 50 கொரோனா மரணங்கள் பதிவு!

Friday, July 16th, 2021

50 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 29 ஆண்களும் 21 பெண்களும் அடங்குகின்றனர். 30-க்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட 12 பேரும், 60 வயதிற்கு மேற்பட்ட 38 பேரும் COVID-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் பதிவாகிய கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 661 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்று இதுவரை 967 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளான 2 இலட்சத்து 53, ஆயிரத்து 953 பேர் குணமடைந்துள்ள நிலையில், 22 ஆயிரத்து 462 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: