நாட்டில் புகைத்தல் பாவனை குறைவடைந்துள்ளது?
Saturday, September 10th, 2016
இலங்கையில் புகைத்தல் பாவனையானது மிகவும் குறைவடைந்துவருவதாக தேசிய மனிதவள மேம்பாட்டு குழுவின் தலைவரும், இலங்கை புகையிலை நிறுவனத்தின் பணிப்பாளரும்தினேஸ் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
புகைத்தல் பாவனையை நிறுத்துவதற்கு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் பிரதிபலனே இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய சுகாதாரத்தை கவனத்திற்கொண்டு புகையிலை சார்ந்த பொருட்களுக்கு வற்வரியினை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் இலங்கை புகையிலை நிறுவனம் 85 பில்லியன் வரி இலாபமாகக் கிடைத்ததாகவும், இந்த வருடத்தில் 100 பில்லியன் வரி இலாபத்தை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் புகைத்தல் பாவனையை முற்றாக குறைப்பதற்காக புகையிலை பொருட்களுக்கான வரியானது 90வீதத்திற்கு மேல் அதிகரிக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அதேவேளை, தற்போது புகைப்பொருட்களுக்கான வரியினால் அரசுக்கு 9000கோடி கிடைப்பதாகவும், புதிய வரி நடைமுறையின் பின்னர் 11,800 கோடி கிடைக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|