நாட்டில் நிதி இல்லை,தேர்தல் தொடர்பில் ஆணைக்குழு தீர்மானிக்கும் – மனுச நாணயகார யாழ்ப்பாணத்தில் தெரிவிப்பு!

அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லை தேர்தல் நடத்தப்பட வேண்டுமா? என்பதை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரயாழில் தெரிவித்துள்ளார்
இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
தேர்தல்தினம் தீர்மானிப்பது தீர்மானிப்பது தேர்தல் நடத்துவதா இல்லையா என்பதை தீர்மானிப்பது? அல்லது தேர்தலுக்குரிய பணத்தினை எங்கே பெறுவது என தீர்மானிப்பது தேசிய தேர்தல் ஆணைக்குழுவினுடைய கடமையாகும்
ஆனால் தேர்தல் ஆணைக்குழு தேர்தல் என்று அறிவித்தால் தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். தற்பொழுது நாட்டை நடத்துவதற்கு பணம் இல்லை. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு கூட பணம் இல்லை. பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை சீருடை,பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்யக்கூட பணம் இல்லை.
அத்தியாவசிய பொருட்களின் விலை மற்றும் போக்குவரத்து சேவை மற்றும் ஏனைய செலவுகளை சமாளிப்பதற்கு கூட நாட்டில் பணம் இலலாத நிலை காணப்படுகிறது
சீரமைக்க வேண்டிய பாதைகள் மற்றும் பழுதடைந்த பாதை களை கூட திருத்த நிதி இல்லாத நிலையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்பதை தேர்தல் ஆணைக்குழு தீர்மானிக்கும்.
தேர்தல் ஆணைக்குழு இவ்வாறான நிலையில் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்து நிதியினை தேடி நடத்த தயாராக இருந்தால் நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதனை நாங்கள் தீர்மானிக்க முடியாது தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|