நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு!

மழையுடனான வானிலையை அடுத்து நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பகள் அதிகரித்தள்ளதாகவும் இது விடயம் தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் காலங்களில் இந்த நிலை அதிகரிக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், கண்டி, இரத்தினப்புரி, கேகாலை, புத்தளம், குருநாகல் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் டெங்கு நோயாளர்களின் வீதம் அதிகரித்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 69 பேர் டெங்கு காய்ச்சல் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Related posts:
|
|