நாட்டில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் புதியதடுப்பூசி!

Friday, May 12th, 2017

நாட்டில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் புதியதடுப்பூசியை அறிமுகம் செய்யமுடியுமென்றும், இத்தடுப்பூசி பிரான்ஸில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தரபண்டார தெரிவித்துள்ளார்.

இவ்வூசியை இலங்கையில் பயன்படுத்தும்போதுஅதனால் ஏற்படக் கூடியசாதகபாதகங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இதற்குமேலதிகமாக உலகநாடுகளில் பயன்படுத்தப்பட்டுவரும் மற்றுமொருதடப்பூசிதொடர்பிலும் ஆராயப்பட்டுவருகின்றன.

நாட்டில் அண்மைக்காலமாக பெய்துவரும் மழைகாரணமாக டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதனைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.

இவ்வாண்டின் இதுவரையான நாட்களில் டெங்குநொய்த் தாக்கத்திற்கு இலக்காகி 90 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரசேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டாரமேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: