நாட்டில் கொரோனாவால் மேலும் 45 பேர் மரணம்!

Monday, July 26th, 2021

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 45 பேர் மரணித்துள்ளனர் என அறிக்கையிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

23 ஆண்களினதும், 22 பெண்களினதும் மரணங்கள் நேற்றுமுன்தினம் இவ்வாறு பதிவாகியுள்ளன.

30 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 3 ஆண்களும், 4 பெண்களும் கொரோனா நோயால் மரணித்துள்ளனர்.

அத்துடன், 60 வயதுக்கு மேற்பட்ட 19 ஆண்களினதும், 18 பெண் களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன எனவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 99 ஆக அதிகரித்துள்ளது.

Related posts: