நாட்டில் குற்றவியல் விசாரணைகள் அதிகரித்துள்ளது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Sunday, March 5th, 2017
நாட்டில் குற்றவியல் விசாரணைகள் கடந்த 2015 – 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் 59 சதவீதத்தில் இருந்து 71 சதவீதமாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ப்ரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்றற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த கருத்து வெளியிட்டார்.
களுத்துறை சிறைச்சாலை கோரிக்கைக்கு அமைய 32 தடவைகள் சந்தேக நபர்களுக்கான பாதுகாப்பை பொலிஸார் வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுத்தத்தின் பின்னர் சட்டவிரோதமான முறையில் ஆயதங்களை வைத்திருப்பதும், இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களின் செயற்பாடுகள் இதில் கூடுதல் தாக்கம் செலுத்தியிருக்கின்றதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
இளம் வர்த்தகர் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள 7 விசேட பொலிஸ் குழுக்கள் !
மீன்பிடித் துறைமுகங்களுக்கான சுகாதார வழிமுறைகள் உடன் வெளியிடுமாறு அமைச்சின் செயலாளருக்கு சுகாதார அமை...
சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பான வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் பாடுபடுகின்றோம் - பி...
|
|