நாட்டில் கடும் பொருளாதார கஷ்டம் ஏற்படும் – அமைச்சர் சம்பிக்க ரணவக்க!

அமெரிக்கா வட்டி வீதத்தை அதிகரிக்க எடுத்த தீர்மானம் காரணமாக இலங்கையில் எதிர்காலத்தில் கடும் பொருளாதார கஷ்டம் ஏற்படும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதனை எதிர்கொள்ள வேண்டுமாயின் குறுகிய கால நடவடிக்கைகளுக்கு செல்லாது, நிரந்தர பொருளாதார கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச வளங்களை விற்பனை செய்வதன் மூலமும் அரச வளங்களை மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலமும் எமது அந்நிய செலாவணி பிரச்சினையை தற்காலிகமாக தீர்க்க முடியும். எனினும் இலங்கை மீண்டும் மீண்டும் இந்த நெருக்கடியை எதிர்நோக்கும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்
Related posts:
உப்பின் அளவும் காட்டப்படவேண்டும்!
கணவனை இழந்த குடும்பத்திற்கு வீடு கட்டிக் கொடுத்த கிரிக்கெட் வீரர்!
அராலிப் பகுதியில் துப்பாக்கியுடன் இருவர் கைது - வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுப்பு!
|
|