நாட்டிலிருந்து வெளியேறுமாறு சீனப்பிரஜைகளுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Friday, August 12th, 2016

விசா வரையறைகளை மீறி இலங்கையில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 16 சீனப் பிரஜைகளை நாட்டிலிருந்து வெளியேருமாறு  கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

குறித்த  சீன பிரஜைகளை இன்று சுற்றுலா பொலிஸார் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த குற்றத்துடன்  16 சீனப்பிரஜைகள் தொடர்புப்பட்டிருந்த நிலையில், 13 பேர் மாத்திரமே நீதின்றில்  ஆஜர்படுத்தப்பட்டனர்.

ஏனைய மூவரும் கொழும்பில் இல்லாத காரணத்தால் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியவில்லை என பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்தார். இந்நிலையில் ஏனைய மூவரையும் நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஆலோசகர் நீதிமன்றில் உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் குறித்த பெண்கள் நாடு திரும்புவதற்கான பயணச்சீட்டை நீதிமன்றில் முன்வைத்திருந்த நிலையில், அதனை ஆராய்ந்த நீதவான் அவர்கள் நாடுதிரும்பியதும்,  அதனை உறுதிப்படுத்தி நீதிமன்றில் எதிர்வரும் 16 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Related posts: