நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு – வளிமண்டலத் திணைக்களம்!..

Wednesday, March 13th, 2019

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல தடவைகள் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, தென், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


இலங்கை - சீனா இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!
பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் சுனாமி முன்னெச்சரிக்கை வேலைத்திட்டம்!
இலங்கையின் எதிர்காலம் ஜனாதிபதியின் கையில் – பிரபல சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹெவா!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கட்டுநாயக்க நெடுஞ்சாலையுடன் இணைப்பு!