நாட்டின் பல பகுதிகளிலும் சீரற்ற காலநிலை!

Saturday, July 10th, 2021

நாட்டின் பல பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள அதேவேளை, சில இடங்களில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன.

குறிப்பாக கேகாலை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் வெள்ள பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறுகின்றது.

அதேவேளை, பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ள நிலையில், மலையகத்துக்கான போக்குவரத்து சில இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்றுடனான வானிலை காரணமாக பல்வேறு இடங்களில் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல இடங்களில் சீரற்ற காலநிலை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: