நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு தென்கொரியா உதவி!

dc19747cf7ec035ea1214b6cb841f34f_XL Monday, November 13th, 2017

நாட்டின்  அபிவிருத்தி பணிகளின் நிமிர்த்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை தென் கொரியா கடனாக வழங்கவுள்ளது

நியாயமான கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தக்கடன் தொனை 2017, 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் வழங்கப்படவுள்ளது

கொரிய நாட்டுக்கான ஏற்றுமதி, இறக்குமதி வங்கியின் பொருளாதார புரிந்துணர்வு நிதியம் இந்த கடனை வழங்குகின்றது. நிவாரண வட்டியின் அடிப்படையின் கீழ் 10 வருடங்கள் முதல் 40 வருடகாலத்தினுள் குறித்த கடன் தொகை திருப்பிச் செலுத்தக்கூடிய வகையில் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் கொரிய அரசாங்கத்துடன் இதற்கான உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளது கொரியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவி வரும் நட்புறவு மற்றும் பொருளாதார புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்கில் இந்த கடன் உதவி இலங்கைக்கு வழங்கப்படுவதாக கொரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!