நாடு முழுவதும் நடமாடும் பொலிஸ் பிரிவு.!

Monday, April 25th, 2016
நாடுமுழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களில் மாதத்திற்கு ஒருமுறை நடமாடும் பொலிஸ் தொலைபேசி சேவை முறையினை கிராம நகர மக்களை நேரடியாக அணுகுவதற்காக அமுல்படுத்தவுள்ளதாக புதிய பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஒரு பொலிஸ் தொலைபேசி சேவை முடிவடையும் நேரத்தில் நாட்டில் இன்னொரு பொலிஸ் தொலைபேசி சேவை ஆரம்பிக்கும் என்றும் மேலும் தெரிவித்தார்.

பொலிஸ் பகுதியில் சமயம், விளையாட்டு, கல்வி, சுகாதாரம், சிரமதானம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுடன் தொடர்புடைய சங்கங்களுடன் இணைந்து செயற்பட பொலிஸ் நிலையங்கள் உறுதுணையாய் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பிரதேச உப பொலிஸ் மா அதிபர் உதவியுடன் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் கிராமத்துக்கும் பொலிஸாருக்கும் இடையிலாக நல்லுறவு கட்டியெழுப்பப்படு;ம். இந்நிகழ்வு கட்டாயமாகவும் தொடர்ச்சியாகவும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

எல்லா பொலிஸ் நிலையங்களிளும் தொண்டர் ஆலோசனை குழு அமைக்கும் அதேநேரத்தில் அங்கு பிரதேச வைத்தியர், சட்டத்தரணிகள் போன்ற உயர் தொழில்களில் உள்ள அதிகாரிகளையும் ஈடுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.


நவீன  தொழில்நுட்பத்தை  அறிமுகப்படுத்துவதற்கு ஜப்பான் இணக்கம்!
நிதி நெருக்கடிகளைச் சந்தித்தாலும் பயிற்சி நெறியை நிறுத்தமாட்டோம் - யாழ்.பல்கலை துணைவேந்தர் !
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 935 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை!
பாஷையூர் புனித அந்தோனியார் ஆலய தேர் பவனி இன்று!
சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை!