நாடு பூராகவும் பற்சிகிச்சைப் பிரிவுகள் அபிவிருத்தி செய்யப்படும் – சுகாதார அமைச்சு!

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் பற்சிகிச்சைப் பிரிவுகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் இதன் அபிவிருத்திக்கு தேவையான 20 கோடி ரூபா உபகரணங்கள் அண்மையில் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையுடன் இணைந்ததாக சகல வசதிகளையும் கொண்ட பல் வைத்தியசாலையொன்று விரைவில் அமைக்கப்படுமென்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை சகல மருத்துவ வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக அபிவிருத்தி செய்ய 130 கோடி ரூபா முதல் கட்டமாக ஒதுக்கப்பட இருப்பதாகவும். 150 கோடி ரூபா இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கென வழங்கப்பட இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Related posts:
இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது கொவிட் தடுப்பூசி - கொவிட் தொற்றுடன் வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்ட...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க - பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலாடா சில்வா இடையே முக்கிய சந்திப்பு ...
அனைத்து துறைமுகங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் பயணிகள் படகு சேவை - இந்திய அரசுடன் கலந்துரையாடல் ந...
|
|