நாடுதிரும்பும் எதிர்பார்ப்பில் 40,000 இலங்கையர்கள் காத்திருப்பு – இராஜாங்க செயலாளர் D.V. சானக தெரிவிப்பு!

Wednesday, December 9th, 2020

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சுமார் 40,000 பேர் நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்திக்கான இராஜாங்க செயலாளர் D.V. சானக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களில் சுமார் 50,000 பேர் இதுவரை நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளில் தங்கியுள்ள ஏனையவர்களையும் விரைவாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் அதற்கமைய கட்டம் கட்டமாக அவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்கள் தற்போது நாட்டிற்கு அழைத்து வரப்படுகின்றனர்.

ஏனைய நாடுகளில் உள்ளவர்களையும் சுகாதார துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைய நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்திக்கான இராஜாங்க செயலாளர் D.V. சானக சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: