நாடா புயலால் மீனவர் பாதிப்பு: இழப்பீடு வழங்குமாறு கோரிக்கை!

Monday, December 5th, 2016

கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலையால் தாம் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாசையூர் சிறகுவலைத் தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சிறகுவலைத் தொழிலுக்கு போடப்பட்ட பாடுகள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பொருளாதார ரீதியாக தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டனர். இதன் காரணமாக சிறகுவலை தொழில் சய்வோரில் 80வீதமான தொழிலாளர்கள் தொழில் இன்றி வீட்டில் முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடல் நீர் தற்போது தெளிவு இன்மையாக விருப்பதாலும், குளிருடன் கூடிய நீரோட்டம் காணப்படுவதாலும் மீனவர்னள் கடலுக்கு இறங்கி பாடுகளை தேடுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மேலும் வழமையாக இடம்பெறும் பணச்சடங்கு நிகழ்வினை பாசையூர் மினவ சங்கம் நிறுத்தியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட தமக்கு உதவிகளை வழங்க கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களம் மன்வர வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Fish

Related posts: