நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீரவின் வாகனம் விபத்து – ஒருவர் பலி!

நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க பயணித்த வாகனம் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை – கண்டி வீதியில் அம்பாறை, கரங்காவை ஜனரஜ வித்தியாலயத்திற்கு முன்னால் குறித்த இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் விபத்தில் படுகாயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உகன, திஸ்ஸபுர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த ஏனைய நபர் அதே வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்தில் நாடாளுமன்ற உறுப்பிருக்கு காயம் எதுவும் இல்லை என்பதுடன், சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|