நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சத்தியப்பிரமாணம்!

Friday, April 9th, 2021

கம்பஹா மாவட்டத்தின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அஜித் மான்னப்பெரும சற்றுமுன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்த ரஞ்சன் ராமநாயக்கவின் வெற்றிடத்துக்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட விருப்புவாக்குப் பட்டியலில் 5 ஆம் இடத்தை பிடித்திருந்த அஜித் மான்னப்பெரும பெயரிடப்பட்டார்.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் நேற்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து, அஜித் மான்னப்பெரும இன்று சத்தியப் பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: