நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படையினருக்கு ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, August 3rd, 2021

நாடளாவிய ரீதியில் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த உத்தரவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்றையதினம் தெரிவித்துள்ளார்.

நாற்பதாவது அதிகாரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12 ஆம் பிரிவு மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் போது ஜனாதிபதியால் வழங்கப்பட்ட அறிவிப்புகளை சமர்ப்பிக்கும் போதே சபாநாயகர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: