நவம்பர் 17ஆம் திகதி தொகை மதிப்பீடு !

Tuesday, November 15th, 2016

அரச மற்றும் அரச சார்புத்துறை சேவையில் ஈடுபட்டுள்ளோர் குறித்த தொகைமதிப்பீடு நவம்பர் 17ம் திகதி நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது

இது தொடர்பாக தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நான்கு வருடங்களுக்கொருமுறை நடத்தப்படும் இத்தொகை மதிப்பீடானது 11வது முறையாக நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளது.

இத்தொகைமதிப்பு சகல அரச மற்றும் அரச சார்புத்துறையில் சேவையில் ஈடுபட்டுள்ளளோரின் பங்களிப்புடன் 2016 நவம்பர் 17ம் திகதி முற்பகல் 9.30 தொடக்கம் 11.30 வரையான காலப்பகுதியில மேற்கொள்ளப்படும் என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரசசார்புத்துறை சேவையில் ஈடுபட்டுள்ளோர் சம்பந்தமான தொகைமதிப்பின் சகல தகவல்களையும் உள்ளடக்கிய ஆவணங்களை கொண்ட ஒரு இணையப்பக்கத்தினை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதனை www.statistics.gov.lk என்ற திணைக்களத்தின் இணையத்தில் பார்வையிடமுடியும்.தொகை மதிப்பு வினாக்கொத்தை சரியாகப் பூர்த்தி செய்து இத் தொகைமதிப்பினை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு ஒத்துழைக்குமாறு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் சகல அரச மற்றும் அரச சார்புத்துறை சேவையில் ஈடுபட்டுள்ளோர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)

Related posts: