நல்லூ தேர் திருவிழாவை முன்னிட்டு புகையிரத போக்குவரத்து விரிவாக்கம்!

நல்லைக் கந்தனின் மகோற்சவத்தை முன்னிட்டு கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கான புகையிரத போக்குவரத்து விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய தற்போது சேவையிலுள்ள புகையிரதகள் மேலதிக பெட்டிகளை இணைத்து போக்குவரத்து முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இந்த விசேட திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு அதிகளவான பயணிகள் யாழ்ப்பாணத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து காங்கேசன்துறைக்கும், அங்கிருந்து கொழும்பிற்கும் இந்த ரயில் சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுமென ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்க முன்வந்துள்ள இஸ்ரேல் !
கொரோனா பரவலின் தன்மையை இலங்கையர்கள் மறந்திருப்பதானது மிகவும் ஆபத்தானது -இராணுவ தளபதி எச்சரிக்கை!
மண்ணெண்ணைக்கு தட்டுப்பாடு கிடையாது - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அறிவிப்பு!
|
|