நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் முதியோருக்கான கொடுப்பனவைப் பெறும் பயனாளிகளுக்கான அறிவுறுத்தல்!

Tuesday, July 19th, 2016

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் முதியோருக்கான கொடுப்பனவைப் பெறும் பயனாளிகளுக்கு அக் கொடுப்பனவு தொடர்பான அறிவுறுத்தலைப் பிரதேச செயலகம் வழங்கியுள்ளது.

அந்த வகையில் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஒவ்வொரு மாதமும் 1900 ரூபா வழங்கப்படும். இக் கொடுப்பனவு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் திகதியிலிருந்து ஏழு நாட்களுக்குள் தபாலகங்கள் அல்லது உப தபாலகங்களினால் வழங்கப்படும்.

ஆகஸ்ட் மாதம் முதல் குறித்தவொரு மாதத்தில் உரிய திகதியில் கொடுப்பனவைப் பெறத் தவறினால் உரிய பயனாளிக்குக் கொடுப்பனவு நிரந்தரமாக நிறுத்தப்படும்.

சுகயீனம் அல்லது வேறு காரணங்களினால் குறித்த திகதியில் பயனாளி பணம் பெறுவதற்குச் செல்ல முடியாத நிலையிருப்பின் கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுடன் வேறொருவர் சென்று கொடுப்பனவைப் பெற முடியும் என அந்த அறிவுறுத்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts: