நல்லூர் ஆலயச் சூழலில் பிளாஸ்ரிக்,ரெஜிபோமில் சுண்டல் விற்கத் தடை !

Friday, August 19th, 2016

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் ஆலயச் சூழலில் சுண்டல் வியாபாரிகள் பிளாஸ்ரிக் மற்றும் ரெஜிபோம் பெட்டிகளில் சுண்டல்களைப் போட்டு விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையின் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வியாபாரிகள் சுண்டல்களை இலைகள் அல்லது பேப்பர் தட்டுக்களில் வைத்தே விற்பனை செய்ய வேண்டும். சுகாதார விதிமுறைக்கு மாறாகப் பிளாஸ்ரிக் தட்டு மற்றும் ரெஜிபோம் பெட்டிகளில் சுண்டல்களைப் போட்டு வழங்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகளை மீறும் சுண்டல் வியாபாரிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுகாதாரப் பகுதியினர் எச்சரித்துள்ளனர்.

Related posts:

பயன்பாடற்ற கார்பன் பேனாக் குழாய்கள் மற்றும் பற்தூரிகைகள் மீள்சுழற்சி கொள்கலனை மதிப்பீடு செய்தார் பிர...
மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்தாக ...
ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் - சர்வதேச வர்த்தக சபையின் தலைவர் மரியா பெர்ணான்டா கர்சா இலங்கை வருகை...