நயினைக் கடலில் மூழ்கி பலியானவர்களுக்கு இறுதி அஞ்சலி!

Wednesday, June 22nd, 2016

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்திர தேர்த் திருவிழாவுக்கு சென்று கடலில் நீராடிய போது மூழ்கி பலியான  கோண்டாவில் நாராயணன் கோவிலடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களான தேவராசா சஞ்ஜெயன் தேவராசா சாருஜன் மற்றும் உதயகுமார் பகீரதன் ஆகியோருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லார் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 19 ஆம் திகதி கடலில் மூழ்கி மரணமடைந்து குறித்த இளைஞர்கள்  மூவரது இல்லங்களுக்கும் சென்று பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலத்திய இரவீந்திரதாசன் அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

9361d7e6-e6d0-4a9d-a889-45a4150a4eb0

Related posts: