நன்னீர் மீன் உற்பத்தியை 150,000 மெற்றிக் தொன்களாக அதிகரிக்க முயற்சி!

Friday, December 30th, 2016

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் நன்னீர் மீன் உற்பத்தியை 150,000 மெற்றிக் தொன்களாக அதிகரிக்கச் செய்வதற்கான திட்டத்தை கடற்றொழில், நீரியியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்துள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீரவின் எண்ணக்கருவுக்கமைய  ‘வாவியுடன் பயணம்’ எனும் தலைப்பின் கீழ் கடற்றொழில் நீரியல் வளங்களை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் 116 களப்புகளும் 10,000 நீர்நிலைகளிலும் மீன் மற்றும் நீர்வாழ் உயிரின  அபிவிருத்திக்கு அரசாங்கம்  2500 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. நீரியியல் வளங்களின் அபிவிருத்திக்காக  பெருந்தொகை நிதி  இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம்  நன்னீர் மீன் உற்பத்தி 75000 மெற்றிக் தொன்னாகும். நாட்டைச் சுற்றி  பாரிய கடல் வளம் இருந்த போதிலும்; வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன் மற்றும் மீன்களின் தொகை 12,000 மெற்றிக் தொன்னாகும்.

DSC_0138

Related posts: