நண்டு பிடித்தல் தொடர்பில் புதிய சட்டங்கள் யாழ்ப்பாண மாவட்ட மீனவர் சங்கம் தெரிவிப்பு!

Friday, March 10th, 2017

யாழ்.குடாநாட்டு கடல் பரப்புகளில் நீலக்கால் நண்டு பிடித்தல் தொடர்பாக புதிய சட்ட விதிகளை உருவாகும் நோக்கில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று யாழ்ப்பாண மாவட்ட மீனவர் சங்க சமாசனம் தெரிவித்துள்ளது.

குடாநாட்டு கடற் பரப்புக்களில் அரியதாக கிடைக்கும் நீலக்கால் நண்டுகளை தென்னிலங்கை தனியார் நிறுவனங்களுடன் சில மீனவர் சங்கங்கள் இணைந்து பிடிக்கின்றன. குறித்த தனியார் நிறுவனங்கள் தீவக கடற்பரப்பில் ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் மூலம் நண்டுகள் செறிந்து வாழும் இடங்களை கண்டு பிடித்து அவற்றை பிடிப்பதற்காக தென்னிலங்கை மீனவர்களை கொண்டு வருகின்றனர்.

அவர்கள் அதிகளவு நண்டுகளை பிடிப்பதனால் உள்ளுர் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக தற்பொழுது யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற் பகுதியில் ஸ்டீவ் கிறீச் என்னும் தனியார் நிறுவனம் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நண்டுகள் செறிந்துள்ள இடங்களை அடையாளப்படுத்திச் சென்றுள்ளது அந்தப் பகுதியில் நண்டுகளைப் பிடிப்பதற்கு உள்ளுர் மீனவர்களுக்கு அனுமதியை இரத்து செய்யும் நோக்கில் செயற்படுகின்றது. எமது குடாநாட்டுக் கடற் பரப்புகளில் எமது மீனவர்கள் மாத்திரம் நண்டுகளைப் பிடிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை யாழ்ப்பாண மீனவர் சமாசம் கேட்டுக்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: