நடைபாதை வியாபாரத்திற்கு யாழ்.பகுதியில் தடை புல்லுக்குளம் சுற்றாடலிலேயே இடங்கள் ஒதுக்கீடு!

Thursday, October 27th, 2016

தீபாவளியை முன்னிட்டு யாழ்.நகரத்தில் நடைபாதை வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களின் பொருள்கள் யாழ்.மாநகர சபையால் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என யாழ்.மாநகர சபையின் பிரதான வருமான பரிசோதகர் கே.ஜெயராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு யாழ்நகரப்பகுதியில் வியாபார நடவடிக்ககைளுக்காக யாழ்.மாநகர சபையால் மேற்கொண்டுள் முன்னேற்பாடுகள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

தீபாவளியை முன்னிட்டு யாழ்.நகரத்தில் புதிதாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, புல்லுக்குள பகுதியில் வர்த்தக நிலையங்களை நிறுவி, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதுவரை யாழ்.மாநகர சபையால் 60 புதிய கடைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்.நகரத்தில் நடைபாதைகளில் வைத்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களது பொருள்கள் யாழ்.மாநகர சபையால் பறிமுதல் செய்யப்படும், உரிய சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். நடைபாதை வியாபாரிகள் தங்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள புல்லுக்குளப் பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை அமைப்பதற்கு போதிய இடங்கள் இன்மையால் எல்லோருக்கும் புல்லுக்குளப் பகுதியிலேயே இடம் பகிர்ந்தளிக்கப்படுகின்றது – என்றார். அதேவேளை நேற்று வரையில் யாழ்.நகரத்தில் தீபாவளி வியாபாரம் களைகட்டவில்லை என வியாபாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

Caption

Related posts: