நடைபாதையில் பொருட்களை வைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட பத்து வியாபாரிகளுக்கு அபராதம்!

Saturday, December 3rd, 2016

யாழ். நகரப் பகுதியில் நடைபாதையில் பொருட்களை வைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட பத்து வியாபாரிகளுக்கு முப்பதாயிரம் ரூபா அபராதமாக விதித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி சி. சதீஸ்தரன் உத்தரவிட்டுள்ளார்.

வீதியால் போக்குவரத்துச் செய்யப்பட்டோருக்கு இடையூறாக நடைபாதையில் பொருட்களை வைத்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கெதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு கடந்த புதன்கிழமை(30) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது பத்து வியாபாரிகளையும் தலா மூவாயிரம் ரூபா அபராதமாகச் செலுத்துமாறு உத்தரவிட்ட நீதவான் மீண்டுமொரு தடவை இவ்வாறான குற்றச் சாடு உங்கள் மீது சுமத்தப்பட்டால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்தார்.

IMG_3099 copy

Related posts: