நடுவீதியில் ரயர்களை கொழுத்திய இளைஞர் கைது!

Wednesday, September 21st, 2016

யாழ். நகர் முட்டாஸ் கடைச் சந்தியில் ரயர் கொழுத்திய இளைஞர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.உடையார் கட்டு முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க இளைஞரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ். நகர் முட்டாஸ் கடைச் சந்தியில் இன்று அதிகாலை பழைய ரயரினை போட்டு எரித்துள்ளார்.சம்பவத்தினை அறிந்த யாழ்ப்பாணம் பொலிஸார் சென்று இளைஞரை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றார்.

இந்நிலையில், நாளை மறுதினம் 24 ஆம் திகதி சிங்கள குடியேற்றம் மற்றும் காணி சுவீகரிப்பிற்கு எதிராக யாழ்.நகரில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெறவுள்ளது.

arrest_07

Related posts: