தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்து!

Friday, October 14th, 2016

பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்படவுள்ளதாக, தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யூ டி.ஜே.செனவிரத்ன தெரிவித்தார். 1000 ரூபா சம்பள அதிகரிப்பது என்பது அனைத்து பிரிவினராலும் வழங்கப்பட்ட வாக்குறுதி அல்லவென, தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யூ டி ஜே செனவிரத்ன கூறினார்.

பொறுப்பற்ற வகையில் 1000 ரூபா வழங்குவதாக வாக்குறுதியளித்த தொழிற்சங்கங்கள் இந்தபொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், தற்போது 1000 ரூபா சம்பளத்தை வழங்கும் பொருளாதாரம் இல்லை என்பதுடன், இதனை தோட்ட தொழிலாளர்கள் புரிந்துகொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

730 ரூபா என்ற இணக்கப்பாடே தற்போது எட்டப்பட்டுள்ளதாகவும், கூட்டு ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்படும் எனவும், தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் டபிள்யூ டி ஜே செனவிரத்ன மேலும் குறிப்பிட்டார்.

11-2611

Related posts: