தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை 800 ரூபாவாக உயர்த்துவது தொடர்பாக கவனம்!

Friday, April 8th, 2016

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 800 ரூபாவாக உயர்த்துவது குறித்து தொழில் மற்றும் தொழில் உறவு அமைச்சு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் 600 ரூபா வழங்கப்படுகின்றது.வாழ்க்கைச் செலவு உயர்விற்கு ஏற்ற வகையில் சம்பளங்கள் உயர்த்தப்படவில்லை என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று இவ்வாறு சம்பளத்தை உயர்த்த இணங்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளங்கள் 800 ரூபாவாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர இராஜகிரியவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான கூட்ட உடன்படிக்கை கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் பூர்த்தியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 6500 ரூபா பண்டிகைக் கால கொடுப்பனவு உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts: