தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு 

Thursday, November 3rd, 2016

தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த முதியவரொருவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(02) மதியம் யாழ். சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விவசாயியான குறித்த முதியவர் தோட்டத்தில் வழமை போன்று வேலையிலீடுபட்டிருந்த போது திடீரென மயங்கி நிலத்தில் விழுந்துள்ளார். அருகில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் குறித்த முதியவரை மீட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
எனினும், முதியவரின் உடலைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த கந்தையா வரதராஜ்( வயது-60) என்ற விவசாயியே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
death331

Related posts:

தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரியைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ தெரிவிப்பு
அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் - பொது மக்களிடம் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி கோரிக்கை!
மக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்...