தொழில் திணைக்களத்தின் பணிகள் வழமை போன்று நடைபெற்று வருகிறது – தொழில் அமைச்சர்!

அரச சேவை தெழில் அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் தொழில் சங்க நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் தொழில் திணைக்களத்தின் பணிகள் வழமை போன்று நடைபெற்று வருவதாக தொழிற் சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளை 23 இன் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தற்டீபாது இடம்பெற்றுவரும் தொழில்சங்க நடவடிக்கை குறித்து நேற்று சபையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரட்ன – அரசசேவை தொழில் அதிகாரிகள் சங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் எட்டப்பட்ட உடன்பாட்டுக்கு அமைவாக சேவை யாப்பொன்றுக்கான திருத்தச் சட்டமூல வரைவுக்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இந்த அதிகாரிகள் தமக்கு உரித்தான சம்பளத் தொகுதிக்கான எம்என்-5 க்குப் பதிலாக நிறைவேற்று அதிகாரிகளுக்கான எஸ்எல்-வண் என்ற சம்பளத் தொகுதியை பெற்றுத்தருமான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இந்த எஸ்எல்-வண் சம்பளத் தொகுதி இலங்கை நிர்வாக சேவை பொறியியலாளர் சேவை இலங்கை மனிதவள சேவை போன்ற சேவைகளுக்கு உட்பட்ட சம்பளத் தொகுதியாகும். இதனை இவர்களுக்கு வழங்குவதன் மூலம் அனைத்து அரச சேவையிலும்; தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு மேலதிகமான வெற்றிடங்களாக இருக்கும் 239 தொழில் அதிகாரிகளின் பதவிகளுக்காக புதிய அதிகாரிகளை சேர்த்துக் கொள்ளப்படுவதை நிறுத்துமாறும் இவர்கள் கோரியுள்ளனர். இருப்பினும் இதற்காக 202 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவையும் அரச சேவை ஆணைக்குழுவும் அங்கீகாரம் அளித்துள்ளன. ஏழு வருடங்களுக்கு முன்னரே இத்துறைக்கு அதிகாரிகள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டளர். இதனால் இந்த விடயத்தை கைவிட முடியாது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
இது தொடர்பான அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கத்திற்கு அறிவித்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் ஏழாவது நாளாகவும் நேற்று பாராளுமன்றத்தில் நடைப்பெற்றது. உள்நாட்டு அலுவல்கள் அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் வீடமைப்பு கட்டட நிர்மாணம் ஆகிய அமைச்சுக்களுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு விவாதம் நடைபெற்றது.
Related posts:
|
|