தொழில் திணைக்களத்தின் உப  தொழில் அலுவலகம் திறப்பு

Saturday, April 9th, 2016

தொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உப தொழில் அலுவலகம் திறந்து வைகப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ டி ஜோன் செனவிரட்ன மற்றும் தொழில் மற்றும் தொழில் சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் இரவீந்திர சமரவீர  ஆகியோர் நாடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக  புதிய அலுவலகத்தை திறந்து வைத்துள்ளனர்.

55 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட புதிய கட்டடம்  இன்று சனிக்கிழமை கிளிநொச்சி ஏ9 வீதி பாராதிபுரம் சந்தி எனும் முகவரியில்  திறந்து வைக்கப்பட்டது

யாழ்ப்பாணத்தில் மாவட்ட அலுவலகத்தினையும் கிளிநொச்சியில் உப தொழில் அலுவலகமாகவும் செயற்படுகின்ற தொழில் அலுவலகம் தொழில் தருனர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையேயான முரண்பாடுகள், பிணக்குகளை மற்றும்  பல்வேறு விடயங்கள் தொடர்பில் சட்டரீதியாக நடவடிக்கைள் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தரப்புகளுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

Related posts: