தொழில் அலுவலகங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கும் வரையறை!

Monday, May 3rd, 2021

தொழில் திணைக்களமானது அதன் தலைமைச் செயலகம் மற்றும் மாகாணம் மற்றும் மாவட்ட தொழில் அலுவலகங்களுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களை வரையறைக்கு உட்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தொழில் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்தை கோருவதற்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் தொழில் திணைக்களத்தின் இணையதளத்தின் ஊடாக தங்களுக்கு பொருத்தமான திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பெற்றுக் கொள்ளுமாறும் ஆணையாளர் தெரிவித்துள்ளார் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே அனைத்து மிருககாட்சிசாலைகள், சபாரி பூங்காக்கள் மற்றும் யானைகள் சரணாலயம் என்பன மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..

 000

Related posts: