தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!
Monday, October 17th, 2016
திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை தொழிற்பயிற்சி அமைச்சினால் தொழில்நுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடத்தப்படும் 2017 ஆம் ஆண்டுக்கான கற்கை நெறிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் சாயகம் ஜே.ஏ.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள 39 தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் முழுநேர, பகுதி நேர கற்கை நெறிகளை பயில்வதற்கு தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முழுநேர கற்கை நெறிகளை தொடரும் மாணவர்களுக்கு அவர்களது குடும்ப வருமான நிலைகளுக்கேற்ப கல்லூரி வகுப்புக்களுக்கு சமூகமளிக்கும் நாளொன்றுக்க 50ரூபா வீதம் மாணவர் உதவிக் கொடுப்பனவு மாதம் ஒன்றுக்கு 100 ரூபாவிந்கு மேற்படாது வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். தகுதியான விண்ணப்பதாரர்கள் தமது விண்ணப்பங்களை எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் உரிய தொழில்நுட்பவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் பணிப்பாளருக்கு அல்லது அதிபருக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். மேலும் இது தொடர்பான சகல தகவல்களும் அமைச்சின் இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு கற்கை நெறிகளுக்கான விண்ணப்பபடிவங்களையும் இவ் இணையதளம் ஊடாக சமர்ப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|