தொழில்நுட்பக் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Saturday, July 21st, 2018

தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் கீழ் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் (ICCT – NVQ LEVEL 4) சான்றிதழ் பெறுவதற்கான இலவசப் பயிற்சி நெறிக்கு யாழ்ப்பாணம், மானிப்பாய் பயிற்சி நிலையங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கல்வித் தகைமை க.பொ.த (சா.த) இல் கணிதம் – உ, ஆங்கிலம் – உ உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தி அல்லது கணிதம் – S ஆங்கிலம் – S உள்ளடங்கலாக 6 பாடங்களில் சித்தியும் க.பொ.த (உ.த) இல் இரண்டு பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அத்துடன் விண்ணப்ப முடிவுத் திகதியன்று 25 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

தகுதியுடையவர்கள் முழுப்பெயர், முகவரி, பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், கல்வித் தகைமை, தொலைபேசி இலக்கம், பயில விரும்பும் பயிற்சி நிலையம் என்பவற்றைக் குறிப்பிட்டு சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை மாவட்ட அலுவலகர் NAITA  இல.44, சோமசுந்தரம் வீதி, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு 10.08.2018 இற்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் காகத உறையின் இடது பக்க மேல் மூலையில் தகவல் தொடர்பாடல் கற்கைநெறி (ICCTT) இற்கான விண்ணப்பம் என தவறாது குறிப்பிடப்பட வேண்டும் என யாழ் மாவட்ட அலுவலர் கி.கிரு~;ணபாலன் அறிவித்துள்ளார்.

இப் பயிற்சி நெறிக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு 200 மணித்தியால ஆங்கில பாடநெறி இலவசமாக நடத்தப்பட்டு அதற்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: