தொழிற்பயிற்சி நிலைய போதனாசிரியர்களுக்கு விண்ணப்பம் கோரல்!

article_1422424644-images Thursday, October 12th, 2017

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள இலங்கை தொழிற்பயிற்சி நிலைய போதனாசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

வெல்டர், வெதுப்பக உற்பத்தியாளர், சமையலாளர், முன்பள்ளி ஆசிரியர், கட்டட நிர்மாண உதவியாளர், விவசாய இயந்திர உபகரண திருத்துனர், படகு இயந்திரம் திருத்துனர், பெண்கள், சிறுவர் ஆடை வடிவமைப்பாளர், நீர்க்குழாய் பொருத்துனர், அழகுக் கலை வல்லுனர், கணணிப்படவரைஞர், மரவேலை தொழில்நுட்பவியலாளர், மின்னிணைப்பாளர், அறை ஊழியர் போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

விண்ணப்பதாரிகளுக்கு 18-45 குறையாமலும், கா.பொ.த.சாதாரண தரத்தில் 6 பாட சித்தியும் இருக்க வேண்டும். 3 ஆம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் அல்லது அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் ஒன்றில் டிப்ளோமா கற்கை நெறியைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். அத்துடன் குறைந்தது 1 வருட அனுபவத்தையும் பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிப்பவர்கள் தங்களது சுயவிவரக் கோவையையும், சான்றிதழ் பிரதிகளையும் உதவிப் பணிப்பாளர், இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை, 4 ஆம் மாடி, வீரசிங்கம் மண்டபம், இல 12 கே.கே.எஸ் வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.