தொலைக்கல்விப் பரீட்சைகள் ஆகஸ்ட் 12 இல்!

Capture-5 Monday, July 17th, 2017

பேராதனைப் பல்கலைக்கழகம் ஏப்ரல் மாதம் நடத்தவிருந்த முதலாம் வருட 100 வீத மட்ட வெளிவாரி புதிய பாடத்திட்ட பொதுக் கலைமாணி தொடர் தொலைக் கல்விப் பரீட்சைகள் ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் என பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளது.

இப்பரீட்சைகள் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் நாட்டில் பரவிய ஒருவகைக் காய்ச்சல் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மண்சரிவு வெள்ளம் என்பனவற்றால் பிற்போடப்பட்டிருந்தன.

ஏப்ரல் மாதம் இடம்பெறவிருந்த பொதுக் கலைமாணி பட்டப் பரீட்சைக்கான அனைத்து மாணவர்களும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள இப்பரீட்சைக்குத் தோற்றத் தகுதியானவர்களாகக் கொள்ளப்படுவார்கள். அதேவேளை, ஏப்ரல் மாதம் நடாத்தப்படவிருந்த பரீட்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் அனைத்துப் பரீட்சார்த்திகளுக்கும் புதிய அனுமதிப்பத்திரம் அனுப்ப ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தொடர் தொலைக் கல்வி நிலையத்தின் பிரதிப் பதிவாளர் ஆர்.வி.எஸ். ராஜபக்ஸ அறிவித்துள்ளார்.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!