தொண்டு நிறுவனங்களின் விபரங்கள் கோரப்பட்டுள்ளது!

Tuesday, July 26th, 2016


இலங்கையிலுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அதன் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தன்னார்வத் தொண்டு நிறுவன செயலகம் கோரியுள்ளதுடன் எதிர்வரும் 29ஆம் திகதி இது குறித்த விசேட சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


சிறுநிதி நிறுவனங்கள் சிறு கடன் கொடுப்பனவுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அண்மையில் ஆராயப்பட்டுள்ளதுடன் கடன் கொடுப்பனவு தொடர்பில் மத்திய வங்கி சில நியமனங்களை வெளியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சிறு நிதி நிறுவனங்கள் எதிர்வரும் காலங்களில் அனுமதி ஒன்றைப் பெற்றுக்கொள்ள நேரிடும் எனவும் தற்போது இயங்கி வரும் நிறுவனங்கள் அனுமதிப்பத்திரத்திற்காக விண்ணப்பம் செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: