தொடர்கிறது வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர அரசாங்க வேலைவாய்ப்பு வழங்கக் கோரி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 67 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவரகின்றது
இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்ட வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், நாம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக எமது கவனயீர்ப்புப் போராட்டத்தை அமைதி வழியில் மேற்கொண்டு வருகிறோம். ஆனால், எங்கள் பிரச்சினைக்கு இதுவரை எமது வடமாகாண சபை அரசால் உரிய தீர்வு எதனையும் பெற்றுத்தர முடியவில்லை.
படித்து முடித்து விட்டுப் பல்வேறு கனவுகளுடனும், எதிர்பார்ப்புக்களுடனும் வேலையின்றி வாடும் எங்களை வடமாகாண அரசு கண்டு கொள்ளாமை கவலையளிக்கிறது என்றனர்.
Related posts:
நீதிமன்றிற்கு நாகரீகமாக வர வேண்டும் - வெளிநாட்டு பெண்ணை எச்சரித்த நீதவான்!
வறட்சியினால் வில்பத்து தேசிய பூங்கா பாதிப்பு!
பொலிஸாரை மோதித்தள்ளி தப்பிய நபர்கள் - இரு பொலிஸார் படுகாயம்!
|
|
மாஸ்க் அணிவது ஒரு வழிமுறை மட்டுமே : அதன்மூலம் கொரோனா தொற்றில் இருந்து முற்றாக தப்ப முடியாது - உலக சு...
யாழ் குடாநாட்டு வைத்தியசாலைகளில் அனைத்து வகை குருதிக்கும் தட்டுப்பாடு – கொடையாளர்களிடம் அவசர அழைப்பு...
பொருளாதார சவாலில் இருந்து மீட்டு, போட்டி நிறைந்த பொருளாதாரத்தை நோக்கி செல்ல வேண்டுமாயின் நாட்டின் மன...