தொடர்கிறது கடும் குளிர் – சிறுவர், முதியோர் அவதானம் தேவை வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, December 3rd, 2016

வவுனியாவில் அதிகப்படியான குளிர்கால நிலை காணப்படுவதால் சிறுவர் மற்றும் முதியோர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடா புயல் காலநிலையை அடுத்து வவுனியாவில் திடீரென கடும் குளிரான காலநிலை காணப்படுகிறது. பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக குளிரான சூழல் அமையப்பெறும் இடங்களில் இருந்து அகல்வது சிறந்தது. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தமக்கு வைத்தியர்களால் வழங்கப்பட்ட மாத்திரைகளைச் சீராகப் பயன்படுத்த வேண்டும். சிறுவர்கள் தலைப்பகுதி உட்பட உடலை குளிரில் இருந்து பாதுகாக்கும் உடைகளை அணிவதுடன் குளிர்ப் பிரதேசத்தில் விளையாடுவது மழை நீரில் நனையாது இருப்பதிலும் அவதானம் செலுத்தவேண்டும். இதேவேளை சாதாரண குளிர் நீரை பொதுமக்கள் பருகாது இளஞ்சூடான நீரைப் பருகுமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

DSC06132-720x480

Related posts: