தொடரும் வரட்சியான காலநிலை – நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களிடம் கோரிக்கை!
Monday, March 11th, 2024நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களைக் கோரியுள்ளது.
வரட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், பகுதியளவில் நீர் வழங்கப்பட வேண்டும் என சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அபிவிருத்தி திருமதி அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதைய நீர்மட்டம் போதுமானதாக இருப்பதாகவும், முடிந்தவரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தண்ணீரை பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எங்களுடைய சமுதாயம் ஒரு பிறழ்வு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது - பல்கலை துணைவேந்தர் வசந்தி அர...
சோமாலிய கடற்படையினரின் தாக்குதலில் கடற்கொள்ளையர் ஒருவர் பலி - மீட்கும் பணி தீவிரம்!
முல்லைத்தீவில் கடலுணவக்கு தட்டுப்பாடு!
|
|