தையிட்டியில் வெடிபொருட்களின் அச்சத்தினால் மக்கள் பாதிப்பு!

Tuesday, March 7th, 2017

வலிகாமம் வடக்கில் கடந்த வருடத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தையிட்டி கிழக்குப் பகுதியின் சிலவிடங்களில் வெடி பொருட்களின் அபாயம் காணப்படுவதால் தாம் அச்ச உணர்வுடன் வாழ வேண்டியேற்பட்டுள்ளதாக குறித்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இந்தப் பகுதியில் வெடிக்கக் கூடிய நிலையில் மோட்டார்ச் செல்லொன்று மீட்கப்பட்டுப் பின்னர் வெடிபொருட்கள் அகற்றும் பிரிவினரால் குறிப்பிட்ட செல் அங்கிருந்து அகற்றப்பட்டது. இதன் காரணமாக இந்தப் பகுதியில் விடுக்கப்பட்டுள்ள தமது காணிகளைப் பார்வையிடச் செல்லும் மக்கள் வெடிபொருட்களின் அபாயம் காரணமாக தமது இடங்களைப் பார்வையிடுவதற்குச் செல்ல அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: