தேர்தல் பிற்போவதற்கான பொறுப்பை பசில் ஏற்க வேண்டும் – அமைச்சர் பைசர்!

உள்ளுராட்சிமன்ற தேர்தல் பிற்போவதற்கான பொறுப்பை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஏற்க வேண்டும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அரநாயக்க பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனை தெரிவித்தார் . உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதற்கான தேவை தமக்கு இல்லையென அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான திருத்த சட்ட மூலம் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் செப்டெம்பர் மாதத்தில் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தமக்கு தெரிவித்துள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா குறிப்பிட்டார்.
Related posts:
தேசிய பாதுகாப்பு என்பது தண்ணீர் போன்றது - பாதுகாப்பு செயலாளர்!
பணிக்குத் திரும்புமாறு பல்கலை. கல்விசாரா ஊழியர்களுக்கு அழைப்பு - உயர் கல்வி அமைச்சு!
நாடுதிரும்பும் எதிர்பார்ப்பில் 40,000 இலங்கையர்கள் காத்திருப்பு - இராஜாங்க செயலாளர் D.V. சானக தெரிவி...
|
|